மரபுத் தொடர்கள் விளக்கம் 
 
ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வழி வழியாக (மரபு வழியாக) வழங்கிவரும் பொருளை உணர்த்துவது மரபுத்தொடர் எனப்படும். பொதுவாக வழங்கும் மரபுத் தொடர்கள் , சமூகத்திற்கு சமூகம் வழங்கப்படும் மரபுத்தொடர்கள் எனும் அடிப்படையில் பல மரபுத்தொடர்கள் தமிழில் காணப்படுகிறன. இதன் ஆங்கிலப் பதம் idioms and phrases என்பதாகும். 

மரபுத்தொடர் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும் :  மரபுத்தொடர் புத்தகம் pdf 


 மரபுத் தொடர்களுக்கான உதாரணங்கள் 
 
[ அ ] 
 01 . அள்ளிக் குவித்தல் - நிறையச் சம்பாதித்தல் 
02 . அறைகூவுதல்- போருக்கு அழைத்தல் 
03 . அரை மனிதன் - மதிப்பில்லாதவன் 
04 . அண்டப்புழுகன்- பொய்காரன் 
05. அலைக்கழித்தல்- அலட்சியம் செய்தல் 
06. அறுதியிடுதல் - முடிவுகட்டுதல் 
07. அகடவிகடம்- தந்திரம் 
08. அரைப்படிப்பு - நிரம்பாத கல்வி 
09. அடியொற்றுதல்- பின்பற்றுதல் 
10. அள்ளியிறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல் 
11. அடுக்கு பண்ணுதல் - ஆயத்தம் செய்தல் 
12. அடியிடுதல் - தொடங்குதல்
13. அடிநகர்தல்- இடம்பெயர்தல் 
14. அடிபிழைத்தல் - நெறி தவறி நடத்தல் 
15. அடி திரும்புதல்- பொழுது சாய்தல் 
16. அடிப்பிடித்தல்- தொடருததல் 
17. அடி பிறக்கிடுதல் - பின்வாங்குதல் 
18. அரக்கப் பறக்க - விரைவாக 
19. அடியுறைதல் - வழிப்படுத்தல் 
20. அவசரக்குடுக்கை - பதற்றக்காரன் 
21. அகலக் கண் வைத்தல் - அளவு கடந்து போதல் 
22. அழுங்குப்பிடி - விடாப்பிடி 
23. அறுதியிடல் - முடிவு கட்டுதல் 
24. அமளி செய்தல் - குழப்பம் செய்தல் 
25. அடி பணிதல் - கீழ்ப்பணிதல் 
26. அடி விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச் செய்தல் 
27. அகலக் கால் வைத்தல் - அளவுகடந்து போதல் 

 [ ஆ ] 
28. ஆகாயக் கோட்டை - மிதமிஞ்சிய கற்பனை 
29. ஆறப்போடல் - பிற்போடல் 
30. ஆசை வார்த்தை - ஏமாற்றுப் பேச்சு 
31. ஆட்கொள்ளல் - அடிமை கொள்ளல் 
32. ஆழம் பார்த்தல் - ஒருவரின் தகுதி பற்றி ஆராய்தல் 
33. ஆயிரம்காலத்து பயிர் - நெடுங்காலம் நிலைத்திருத்தல் 
34. ஆடாபூதி - ஏமாற்றுக்காரன் 

 [ இ ] 
35. இரண்டும் கெட்டான் - நன்மை தீமை அறியாதவன் 
36. இலை மறை காய் - வெளிப்படாது மறைந்திருத்தல் 
37. இளிச்சவாயன் - எளிதில் ஏமாறுபவன் 
38. இட்டுக்கட்டுதல் - இல்லாததை சொல்லுதல் 
39. இலவு காத்த கிளி - காத்திருந்து ஏமாறுதல் 
40. இரண்டு தோணியில் கால் வைத்தல் - ஒரே நேரங்களில் இரு செயல்களில் ஈடுபடல் 

 [ ஈ ] 
41. ஈரல் கருகுதல் - வேதனை மிகுதல் 
42. ஈவிரக்கம் - கருணை 
43. ஈயோட்டுதல் - தொழிலெதுவுமின்றி இருத்தல் 
44. ஈடேறுதல் - உயர்வடைதல் 

 [ உ ] 
45. உள்ளங்கையில் நெல்லிக்கனி - வெளிப்படையாக தெரிதல் 
46. உதவாக்கரை - பயனற்றவன் 
47. உப்பில்லாப் பேச்சு - பயனற்ற பேச்சு 
48. உச்சி குளிர்தல் - மிக்க மகிழ்ச்சி அடைதல் 
49. உருக்குலைதல் - தன்னிலையிலிருந்து மாறுபடல் 
50. உலை வைத்தல் - பிறருக்கு அழிவு வருவித்தல் 
 
உடல் உறுப்புகள் பற்றிய மரபுத்தொடர்கள் 
1. அடி பற்றிய மரபுத்தொடர்கள் 
 
01. அடியொற்றுதல் - பின்பற்றுதல் 
02. அடிநகர்தல் - இடம்பெயர்தல் 
03. அடிபணிதல் - கீழ்ப்படிதல் 
04. அடி விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச்செய்தல் 
05. அடியிடுதல் - ஆரம்பித்தல் 
 
2. கண் பற்றிய மரபுத்தொடர்கள் 

01. கண் வைத்தல் - விருப்பம் கொள்ளுதல் 
02. கண்வளர்தல் - நித்திரை செய்தல் 
03. கண்ணெறிதல் - கடைக்கண்ணால் பார்த்தல் 
04. கண்கலத்தல் - ஒருவரை ஒருவர் விரும்புதல் 
05. கண்மூடுதல் - இறத்தல் 
06. கண் திறத்தல் - அறிவுண்டாதல் 
 
3. கழுத்து பற்றிய மரபுத்தொடர்கள் 

01. கழுத்துக்கொடுத்தல் - பிறர் துன்பத்தில் உதவுதல் 
02. கழுத்தறுத்தல் - நம்பிக்கை துரோகம் செய்தல் 
03. கழுத்திற்கட்டுதல் - வலிந்து திணித்தல் 
04. கழுத்தைக்கட்டுதல் - விடாமல் நெருக்குதல் 

4. காது பற்றிய மரபுத்தொடர்கள் 

01. காது கொடுத்தல் - அவதானித்தல் 
02. காது குத்துதல் - ஏமாற்றுதல் 
03. காதில் ஓதுதல் - கோள் சொல்லுதல் 
04. காதைக்கடித்தல் - இரகசியம் கூறல் 
 
5. கால் பற்றிய மரபுத்தொடர்கள் 

01. கால் பின்னுதல் - தடைப்படல் 
02. கால் பிடித்தல் - காலைப் பற்றிக் கெஞ்சுதல் 
03. கால் கொள்ளுதல் - ஆரம்பித்தல் 
04. காலைச்சுற்றுதல் - பற்றித் தொடர்தல், தொடர்ந்து பற்றுதல் 
05. காலாறுதல் - ஓய்ந்திருத்தல் 
06. கால் ஊன்றுதல் - நிலை பெறுதல் 
07. காலில் விழுதல் - மன்னிப்பு கேட்டல் 

6. வயிறு பற்றிய மரபுத் தொடர்கள் 

01. வயிற்றை கட்டுதல் - செலவைச் சுருக்குதல் 
02. வயிற்றிலடித்தல் - சீவனத்தை கெடுத்தல் 
03. வயிறு வளர்த்தல் - எவ்வாறோ பிழைத்து கொள்ளுதல் 
04. வயிறு கிள்ளுதல்,வயிறு கடித்தல் - பசியுண்டாகுதல் 
05. வயிறு குளிர்தல் - திருப்தி அடைதல் 
06. வயிறு எரிதல் - பொறாமை கொள்ளுதல் 

7. வாய் பற்றிய மரபுத்தொடர்கள் 

01. வாய் விடுதல் - வெளிப்படையாக கேட்டல் 
02. வாய் புலம்பல் - பிதற்றுதல் 
03. வாய் திறத்தல் - பேசத்தொடங்குதல் 
04. வாய்ப்பூட்டுப் போடுதல் - பேசாது தடுத்தல் 
05. வாயில் மண் போடுதல் - கேடு விளைவித்தல் 
 
8. கை பற்றிய மரபுத்தொடர்கள் 

01. கை கழுவுதல் - முற்றாய் விலகல் 
02. கை கூடல் - அனுகூலமாதல் 
03. கையிடல் - ஆரம்பித்தல் 
04. கை நீட்டுதல் - அடித்தல் 
05. கைபிசைதல் - செய்வதறியாது திகைத்தல் 
06. கை தளர்தல் - வறுமையாதல் 
07. கை கொடுத்தல் - உதவி செய்தல் 
08. கை மிகுதல் - அளவு கடத்தல் 
09. கைகலப்பு - சண்டை 
10. கையளித்தல் - ஒப்படைத்தல் 

9. செவி பற்றிய மரபுத்தொடர்கள் 

01. செவி கொடுத்தல் - கவனித்து கேட்டல் 
02. செவிக்கேறுதல் - கேட்பதற்கு இனிமையாக இருத்தல் 

10. தலை பற்றிய மரபுத்தொடர்கள் 

01. தலைகாட்டுதல் - வெளிவருதல் 
02. தலை கீழாய் நடத்தல் - முறை தவறி நடத்தல் 
03. தலைக்கொழுப்பு - தான் என்ற அகந்தை 
04. தலைப்பாரம் - தான் என்ற அகந்தை 
05. தலை வீக்கம் - தான் என்ற அகந்தை 
06. தலைக்கணம் - தான் என்ற அகந்தை 
07. தலைகீழாய் நிற்றல் - பிடிவாதம் பிடித்தல் 
08. தலைப்படுதல் - மேற்கொள்ளுதல் 
09. தலைமறைவு - ஒளிந்திருத்தல் 

11. தோள் பற்றிய மரபுத்தொடர்கள் 

01. தோளிலிருந்து செவிகடித்தல் - ஆதரிப்பவரை வஞ்சித்தல் 
02. தோள் மாற்றுதல் - பிறர் சுமையை தான் சுமத்தல் 
03. தோள் கொடுத்தல் - உதவி செய்தல் 

12. நா பற்றிய மரபுத்தொடர்கள் 

01. நாக்கு வளைத்தல் - பழித்தல் 
02. நாக்கு நீழுதல் - அடக்கமின்றி பேசுதல் 
03. நாக்கு விழுதல் - பேச நாவெழாமல் போதல் 
04. நாக்கடைத்தல் - பேச முடியாது இருத்தல் 
05. நாக்குத்தவறுதல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல் 
06. நாக்குப் புரளுதல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல் 
07. நாக்குத்தப்பல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல் 

13. பல் பற்றிய மரபுத்தொடர்கள் 

01. பல் இழித்தல் - பல்லைக்காட்டி கெஞ்சுதல் , ஏளனம் செய்தல் 
02. பல்லைக்கடித்தல் - துன்பம் தருவதை சகித்து கொள்ளல் 
03. பல்லைப் பிடுங்குதல் - சக்தியை அடக்குதல்

No comments:

Post a Comment

  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts