Showing posts with label IQ/Aptitude. Show all posts
Showing posts with label IQ/Aptitude. Show all posts

IQ Question in Tamil Questions 58-61

வினாக்கள் 58-61

தாயக்கட்டை  ஒன்றை இரு தடவைகள் புரட்டுவதால் கீழுள்ள X , Y எனும் இரு அமைவுகள் கிடைக்கப் பெற்றது.

 (58) அமைவு X இல் வலப்பக்கமாக புரட்டுவதால் உள்ள அமைவு யாது?
(59) அமைவு Y இல் இருந்து 9 தடவைகள் புரட்டுவதால் உள்ள அமைவு யாது?

(60) அமைவு X இல் இருந்து இடப்புறமாக 15 தடவைகளும் பின்புறமாக 6 தடவைகளும் புரட்டுவதால் கிடைக்கப் பெறும் அமைவு யாது?

(61) அமைவு X ஐ 13 தடவைகள் வலப்புறமாகவும் , அமைவு Y ஐ 5 தடவைகள் முன் பக்கமாகவும் புரட்டுவதால் உருவாகும் அமைவுகளின் ஒத்த பக்கங்களின் வித்தியாசங்களின் கூட்டுத்தொகை யாது ?

              (i) 16                               (ii) 15                            (iii) 12                               (iv) 14











IQ Question in Tamil Question 57

வினா 57

A , B , C எனும் வாகனங்களின் சக்கரங்களின் ஆரைகளுக்கிடையிலான விகிதம் 2:1:3 ஆகும். அவற்றின் வேகங்களுக்கிடையிலான விகிதம் 3:2:1 ஆகும். அவை சென்ற தூரங்களுக்கு இடையிலான விகிதம் 3:1:4 எனின்; 3 வாகனங்களையும் அவற்றின் சக்கரங்கள் ஒரு செக்கனில் சுழன்ற சுழற்சியின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக.



IQ Question in Tamil Questions 52-56

வினாக்கள் 52-56

கீழுள்ள பை வரைபில் (Pie-Chart) பங்கு சந்தை ஒன்றின் A,B,C,D,E,F எனும் 6 வகையான பங்குகளின் ஆரம்ப விலை ஆரைச்சிறையின் சுற்றளவாலும், தற்போதைய விலை ஆரைச்சிறையின் பரப்பளவாலும் குறிக்கப்படுகிறது. இதனை அடிப்படையாக வைத்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க. (வட்டத்தின் ஆரை 7 அலகுகள்)


(52) பங்குகளின் ஆரம்ப விலையின் சராசரிப் பெறுமானம் யாது?

(53) பங்குகளின் தற்போதைய  விலையின் ஆகாரப் பெறுமானம் யாது?

(54) பங்குகளின் தற்போதைய  விலையின் சராசரிப் பெறுமானம் ஆரம்ப விலையின் சராசரிப் பெறுமானத்தில் இருந்து எவ்வளவால் அதிகரிக்கிறது ?

(55) பங்குகளின் தற்போதைய விலைகளின் வீச்சு யாது ?

(56) அதிக பங்கு இலாபத்தைப் பெறும் குறித்த வகை பங்கானது தற்போதைய விலையின் சராசரியில் இருந்து எவ்வளவால் அதன் பங்கு இலாபம் அதிகரித்து உள்ளது ?
(உதவி : பங்கு இலாபம் = தற்போதைய விலை - ஆரம்ப விலை)






















IQ Question in Tamil Question 51

வினா 51

வட்டத்தினுள் வரையக்கூடிய மிகப்பெரிய சதுரத்தின் பரப்பளவு 49 சதுர அலகுகள் எனின்; வட்டத்தின் பரப்பளவு எத்தனை  𝜋 சதுர அலகுகள் ?






IQ Question in Tamil Questions 49,50

வினாக்கள் 49,50

(49) 3 ஆண்களும் , 3 பெண்களும் அருகருகே அமராமல் எத்தனை வழிகளில் ஒரு வட்ட மேசையை சுற்றி அமர முடியும்?

(50) 7 ஆண்களும் , 4 பெண்களும் பெண்கள் ஒன்றாக அமரக்கூடியவாறு எத்தனை வழிகளில் ஒரு வட்ட மேசையை சுற்றி அமர முடியும்?



IQ Question in Tamil Question 48

வினா 48

ஒரு சதுர வடிவ காகிதம் ஒன்று சமமான பகுதிகளை கிடையாகவும் , நிலைக்குத்தாகவும் மாற்றி மாற்றி 4 தடவைகள் மடிக்கப்படுகிறது. பின்னர் 44cm  சுற்றளவு உடைய மிகப்பெரிய வட்டங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றது. எஞ்சியுள்ள காகிதத்தின் பரப்பு யாது? 


IQ Question in Tamil Question 47

வினா 47

சதுரம் ஒன்றின் மூலைவிட்டம், வட்டம் ஒன்றின் விட்டம் என்பவற்றிக்கிடையிலான விகிதம் 4:7 எனின்; அவற்றின் பரப்பளவுகளுக்கிடையிலான எளிய விகிதம் யாது ?


 

IQ Question in Tamil Question 46

வினா 46

சமந்தரமான பாதையில் ஒன்றுக்கொன்று எதிர் திசையில் இரு புகையிரதங்கள் 36kmph , 25ms-1 எனும் வேகங்களில் ஒன்றையொன்று கடக்க எடுக்கும் நேரம் 8 செக்கன்கள் ஆகும். ஒரு புகையிரதத்தின் நீளம் 100m  எனின் மற்றைய புகையிரதத்தின் நீளம் என்ன? 


IQ Question in Tamil Questions 41-45

வினாக்கள் 41-45

(41) நேரம் 5.25 ஆக இருக்கும் போது மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையிலான கோணம் யாது ?

(42) மணி முள் 3.5cm ம் , நிமிட முள் 7cm ம் உள்ள கடிகாரம் ஒன்றின் நேரம் 3.15 எனின்; அவற்றினால் கடிகார தளத்தில் வரையப்பட்ட பரிதிகளின் வித்தியாசம் யாது ?

(43) 6 மணியிலிருந்து 7 மணி வரையிலான நேர இடைவெளியில் எப்போது மணி முள்ளும் நிமிட முள்ளும் ஒன்றையொன்று சந்திக்கும் ?

(44) 5 மணியிலிருந்து 6 மணி வரையிலான நேர இடைவெளியில் எப்போது மணி முள்ளும் நிமிட முள்ளும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் ?

(45)  7 மணியிலிருந்து 8 மணி வரையிலான நேர இடைவெளியில் எப்போது மணி முள் நிமிடமுள்ளுக்கு நேர் எதிர் திசையை அடையும் ?



IQ Question in Tamil Question 40

வினா 40

ஓய்விலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த வாகனம் ஒன்று ஒரு குறித்த தூரத்தை முதல் 10 செக்கனில் தலா ஒவ்வொரு செக்கனுக்கும் 5m/s  வேகத்தை அதிகரிக்கிறது. அடுத்த 10 செக்கனில் சீரான வேகத்திலும் இறுதி 5 செக்கனில் தலா ஒவ்வொரு செக்கனுக்கும் 10m/s எனும் வீதத்தில் வேகத்தை குறைப்பதன் மூலம் ஓய்வுக்கு வருகிறது. அதே தூரத்தை தாமதமின்றி செல்வதற்கான சீரான வேகம் என்ன?



IQ Question in Tamil Questions 35-39

வினாக்கள் 35-39

ஒரு குறிப்பிட்ட 85 மாணவர்களை கொண்ட வகுப்பு ஒன்றில் கிரிக்கட் , எல்லை , கால்பந்து விளையாடுபவர்கள் பற்றிய அறிக்கை ஒன்று தரப்பட்டுள்ளது.

* கிரிக்கட் விளையாடும் அனைவரும் எல்லை விளையாடுகின்றனர்.

* கிரிக்கட் மாத்திரம் விளையாடுபவர்களது  எண்ணிக்கை கால்பந்தினை மாத்திரம் விளையாடுபவர்களது  எண்ணிக்கையின் அரை மடங்காகும்.

* எல்லை அல்லது கால்பந்து என்பவற்றில் குறைந்தது ஒரு விளையாட்டையேனும் 70 பேர் விளையாடுகின்றனர்.

* கிரிக்கட் அல்லது கால்பந்து என்பவற்றில் குறைந்தது ஒரு விளையாட்டையேனும் 80 பேர் விளையாடுகின்றனர்.

* 38 பேர் எல்லை விளையாடுகின்றனர்.

* எல்லையும் கிரிக்கட்டையும் மாத்திரம் விளையாடுபவர்களுக்கும் கால்பந்தை மாத்திரம் விளையாடுபவர்களுக்கும் இடையிலான விகிதம் 3:2 ஆகும்.

35. ஒரு விளையாட்டையும் விளையாடாதவர்கள் எத்தனை பேர் ?

36. கிரிக்கட்டை மாத்திரம் விளையாடுபவர்கள் எத்தனை பேர் ?

37. கால்பந்தையும் கிரிக்கட்டையும் மாத்திரம் விளையாடுபவர்கள் எத்தனை பேர் ?

38. இரு விளையாட்டுக்களை மாத்திரம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை யாது?

39. 3 விளையாட்டுக்களையும் விளையாடுபவர்களின் எண்ணிக்கை யாது?






















IQ Question in Tamil Question 34

வினா 34

குறித்த ஒரு வகையான பக்ரீரியா இனமானது ஒவ்வொரு 10 மில்லி செக்கனிலும் அதற்கு முதல் இருந்த அளவின் குறிப்பிட்ட மடங்கால் அதிகரிக்கிறது. 1/2 செக்கனில் 96 ஆகவும் , 1 செக்கனில் 3072 ஆகவும் அதிகரிக்கிறது எனின்; 1 1/2 செக்கனில் உள்ள மொத்த பக்ரீரியாக்களின் எண்ணிக்கை யாது?



IQ Question in Tamil Question 33

வினா 33

ரவி , கவி , புவி எனும் மூவர் குறித்த எண்ணிக்கையான பழங்களை 1:2:3 எனும் விகிதத்தில் பங்கிட்ட போது 5 பழங்கள் மீதியாக இருந்தது. 2:3:5 எனும் விகிதத்தில் பங்கிட்ட போது  3 பழங்கள் மேலதிகமாக தேவைப்பட்ட்து. மூவரும் சமமாக பகிர்ந்து கொள்ளும் போது 2 பழங்கள் எஞ்சியது எனின் மொத்த பழங்களின் எண்ணிக்கை யாது?

(1) 23
(2) 35
(3) 17
(4) 50



IQ Question 27-32

வினாக்கள் 27-32

27. 20 மாணவர்களை கொண்ட வகுப்பு ஒன்றில் முதல் 3 புள்ளிகளை பெற்ற மாணவர்கள் எத்தனை வழிகளில் அமையலாம்?

28. ஒரு பெட்டி ஒன்றில் 1 தொடக்கம் 7 வரை இலக்கமிடப்பட்ட வேறுபட்ட 7 பந்துகள் உள்ளன. ஒருவர் பந்து ஒன்றை வெளியே எடுத்து மீண்டும் பெட்டியினுள் இட்டார் இவ்வாறு 3 தடவைகள் செய்கிறார் எனின்; எத்தனை வழிகளில் அவர் 3 பந்துகளை தேர்ந்தெடுக்க முடியும்?

29. ரவி ஒரு  குழுவின் தலைவர். ரவி உள்ளடங்கலாக 5 பேரைக்கொண்ட குழு 10 நபர்களில் இருந்து எத்தனை வழிகளில் தெரிவு செய்யப்படலாம்?

30. ஒரு கடவுச்சொல் (Password) முதலில் இரு ஆங்கில எழுத்துக்களையும், அடுத்ததாக 0 தொடக்கம் 9ற்கு இடையிலான மூன்று  எண்களையும்  உள்ளடக்கியுள்ளது.  மீள்செய்கை அனுமதிக்கப்பட்டால் எத்தனை வேறுபட்ட கடவுச்சொல் உருவாக்க முடியும் ?

31. ஏதாவது ஒரு ஒழுங்கில் எழுத்துக்கள் சொல்லை உருவாக்கும் என கருதுக. 
"EDUCATION" எனும் சொல்லில் இருந்து உருவாக்கக்கூடிய வேறுபட்ட நீளங்களை உடைய மீள்செய்கையின்றிய சொற்கள் எத்தனை?

32. ஒருவன் வேறுபட்ட 7 வகையான போட்டி பரீட்சைக்கு தோற்றுகிறான்.  ஒவ்வொரு பரீட்சைகளும் 3 தடவைக்கு மேல் தோற்ற முடியாது.ஆகவே அவன் பரீட்சை எழுதக்கூடிய வழிகள் எத்தனை?


இங்கு மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு மேலதிகமாக வரிசை மாற்றம் மற்றும் சேர்மானம் என்பவற்றுக்கு மிகவும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தவறாமல் கீழுள்ள விடீயோவை பார்வையிடுங்கள்.









IQ Question 26

வினா 26

ஒரு சுவரின் மேல் 8kg திணிவும் , 1m நீளமுமான சீரான உலோகக்கோல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு நுனியில் 10kg திணிவு வைக்கப்பட்டுள்ளது. இந்நுனி  சுவரில் இருந்து 0.3m தூரத்தில் உள்ளது. இக்கோல் சாயாமல் கிடையாக இருப்பதற்கு மறுநுனியில் இருந்து 0.3m தூரத்தில் வைக்கப்படவேண்டிய திணிவு kg ல் யாது?



IQ Question 25

வினா 25 

விட்டம்  28 cm ஆகக்கொண்ட ஒரு உருளை வடிவ தொட்டியில் நீர் நிரம்பியிருக்கிறது. இதில் 11 லீற்றர் நீர் வெளியேற்றப்பட்டால் தொட்டியில் நீரின் அளவு எத்தனை cm  குறைந்திருக்கும்?


IQ Question 24

வினா 24

ஒரு தொகை கூட்டு வட்டியில் 3 வருடத்தில் ரூபா 800 ஆகவும் , 4 வருடத்தில் ரூபா 840 ஆகவும் உயர்கிறது எனில் ஒரு வருடத்திற்கான வட்டி வீதம் யாது ?


IQ Question 23

வினா 23

ஒரு செவ்வகத்தின் நீளம் 10% அதிகரிக்கப்படுகிறது மற்றும் அதன் அகலம் 10% குறைக்கப்படுகிறது எனில் புதிய செவ்வகத்தின் பரப்பளவு?

1. 1% அதிகரிக்கும் 
2. 99% குறையும் 
3. 1% குறையும் 
4. மாறாது 



IQ Question 22


வினா 22

ஒரு காரின் சக்கரத்தின் (டயரின்) ஆரை 14cm ஆகும். 8 நிமிடம் 20 செக்கனில் 17.6km தூரத்தை கார் சென்றது எனின் ; 1 செக்கனில் சக்கரம் ஒன்று எத்தனை முறை சுழன்றுள்ளது? (𝜋 = 22/7)


IQ Question 21

வினா 21

ஒரு கன  வடிவ நீர்த்தாங்கியினுள் 2/3 பங்கு நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அடியில் இருந்து 1/4 பகுதி உயரத்தில் சிறிய துளை ஒன்றினூடாக செக்கனுக்கு 10ml  நீர் வெளியேற ஆரம்பித்து 50 நிமிடத்தில் நீர் வெளியேற்றம் தடைப்பட்டது. நீர்த்தாங்கியின் கனவளவு mஇல் யாது? ( நீர்த்தாங்கியின் சுவரின் தடிப்பு புறக்கணிக்கத்தக்கது. )


  உளச்சார்பு  நிகழ்நிலை பரீட்சை 12ன் பெறுபேறு  கடந்த சில  வாரங்களுக்கு முன்னர்  நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உளச்சார்பு   நிகழ்நிலை பரீட்சை 12...

Popular Posts