வினாக்கள் 27-32
27. 20 மாணவர்களை கொண்ட வகுப்பு ஒன்றில் முதல் 3 புள்ளிகளை பெற்ற மாணவர்கள் எத்தனை வழிகளில் அமையலாம்?
28. ஒரு பெட்டி ஒன்றில் 1 தொடக்கம் 7 வரை இலக்கமிடப்பட்ட வேறுபட்ட 7 பந்துகள் உள்ளன. ஒருவர் பந்து ஒன்றை வெளியே எடுத்து மீண்டும் பெட்டியினுள் இட்டார் இவ்வாறு 3 தடவைகள் செய்கிறார் எனின்; எத்தனை வழிகளில் அவர் 3 பந்துகளை தேர்ந்தெடுக்க முடியும்?
29. ரவி ஒரு குழுவின் தலைவர். ரவி உள்ளடங்கலாக 5 பேரைக்கொண்ட குழு 10 நபர்களில் இருந்து எத்தனை வழிகளில் தெரிவு செய்யப்படலாம்?
30. ஒரு கடவுச்சொல் (Password) முதலில் இரு ஆங்கில எழுத்துக்களையும், அடுத்ததாக 0 தொடக்கம் 9ற்கு இடையிலான மூன்று எண்களையும் உள்ளடக்கியுள்ளது. மீள்செய்கை அனுமதிக்கப்பட்டால் எத்தனை வேறுபட்ட கடவுச்சொல் உருவாக்க முடியும் ?
31. ஏதாவது ஒரு ஒழுங்கில் எழுத்துக்கள் சொல்லை உருவாக்கும் என கருதுக.
"EDUCATION" எனும் சொல்லில் இருந்து உருவாக்கக்கூடிய வேறுபட்ட நீளங்களை உடைய மீள்செய்கையின்றிய சொற்கள் எத்தனை?
32. ஒருவன் வேறுபட்ட 7 வகையான போட்டி பரீட்சைக்கு தோற்றுகிறான். ஒவ்வொரு பரீட்சைகளும் 3 தடவைக்கு மேல் தோற்ற முடியாது.ஆகவே அவன் பரீட்சை எழுதக்கூடிய வழிகள் எத்தனை?
இங்கு மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு மேலதிகமாக வரிசை மாற்றம் மற்றும் சேர்மானம் என்பவற்றுக்கு மிகவும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தவறாமல் கீழுள்ள விடீயோவை பார்வையிடுங்கள்.
No comments:
Post a Comment