வினாக்கள் 22-27
(22) பின்வரும் சொற்களுள் போர்த்துக்கேய மொழிச் சொல்லை தெரிவு செய்க.
(அ) பீரோ
(ஆ) ஜாஸ்தி
(இ) கதிரை
(ஈ) தமாஸ்
(23) எமது நாடு சுற்றுலா துறை மூலம் அதிகளவான அன்னிய செலாவணியை ஈட்டுகிறது. இங்கு "செலாவணி" என்பது எம்மொழி சொல் ஆகும்?
(அ) போர்த்துக்கேய மொழி
(ஆ) ஒல்லாந்து மொழி
(இ) பாரசீக மொழி
(ஈ) உருது மொழி
(24) நான் தேத்தண்ணி குடித்தேன். இங்கு "தேத்தண்ணி" என்பது எம்மொழி சொல் ஆகும் ?
(அ) உருது மொழி
(ஆ) டச்சு மொழி
(இ) பிரஞ்சு மொழி
(ஈ) போர்த்துக்கேய மொழி
(25) பின்வருவனவற்றுள் எச்சொல் பாரசீக மொழிச்சொல் அல்லாதது
(அ) புகார்
(ஆ) வாபஸ்
(இ) சர்கார்
(ஈ) சவால்
(26) தற்போது 3 போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு "சாகுபடி" என்பது எம்மொழி சொல் ஆகும்?
(அ) தெலுங்கு மொழி
(ஆ) பாரசீகம் மொழி
(இ) உருது மொழி
(ஈ) டச்சு மொழி
(27) "அலுமாரி" எனும் சொல் போர்த்துக்கேய மொழிச் சொல் ஆகும். இச்சொல்லுக்குரிய பொருத்தமான தமிழ் பதம் என்ன?
(அ) பொருட்பாதுகாப்பகம்
(ஆ) நிலைப்பேழை
(இ) பொருளடுக்கி
(ஈ) சீர்பேணி
No comments:
Post a Comment