வினாக்கள் 17-21
(17) "இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மேல் மாகாணம் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டது." இச்சொல்லில் உள்ள வடசொல் யாது?
(அ ) பெறுபேறு
(ஆ ) அடிப்படை
(இ ) பரீட்சை
(ஈ ) மாகாணம்
(18) ரகசியம் எனும் வடமொழிச் செல்லுக்கு உரிய பொருத்தமான தமிழ் பதம் யாது ?
(அ ) பரகசியம்
(ஆ ) பூடகம்
(இ ) சாக்கிரதையானது
(ஈ ) பாதுகாப்பானது
(19) பின்வரும் சொற்களுள் வடமொழிச் சொற்களை மாத்திரம் உள்ளடக்கியது
(அ ) ஸ்தாபனம் , ஜயம் , குறும்பு , சேவை , வசதி
(ஆ ) சேஷ்டை , ஜன்னல் , நட்பு , அரியணை , சுதந்திரம்
(இ ) கோஷ்டி , கிரயம் , குதூகலம் , துன்பம் , அருமை
(ஈ ) அவசரம் , ஆகாயம் , இரத்தம் , இலக்கம் , கல்யாணம்
(20) பின்வரும் சொற்களுள் தற்சமம் யாது ?
(அ ) சந்தேகம்
(ஆ ) சந்தோசம்
(இ ) நஷ்டம்
(ஈ ) பாசை
(21) பின்வரும் சொற்களுள் தற்பவம் யாது ?
(அ ) பிரசாரம்
(ஆ ) பூர்வம்
(இ ) மரணம்
(ஈ ) சன்னல்
No comments:
Post a Comment